என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய சிறை"
- குதிராம் போசுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 18 வயதான அவர் எவ்வித அச்சமின்றி வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.
பாட்னா:
வங்காளத்தின் மிதுனாப்பூர் கிராமத்தில் 1889-ம் ஆண்டு குதிராம் போஸ் பிறந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைக்காக புரட்சிகரமான செயல்களில் ஈடுபட்டார். 1905-ம் ஆண்டில் நடைபெற்ற வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், பல காவல்நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. தாக்குதல் நடத்துவது யார் என தெரியாமல் ஆங்கிலேய அரசு திகைத்தது.
1908-ம் ஆண்டில் குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, காவல்நிலையங்கள் மீதான தாக்குதல் குதிராம் போசின் செயல் என ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.
இதையடுத்து, அவருக்கு 1908, ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது 18 வயதான குதிராம் போஸ் எவ்வித அச்சமுமின்றி நாட்டுக்காக, வந்தே மாதரம் என முழங்கியபடி மரணம் அடைந்தார்.
இந்நிலையில், குதிராம் போசின் நினைவு தினமான இன்று பீகாரின் முசாப்பூர் சிறைக்குச் சென்ற அப்பகுதி மக்கள் அங்கு குதிராம் போசின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
- போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இங்கு அடிக்கடி கைதிகளுக்குள் மோதல் நடப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியான நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன், அத்தாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தூத்துக்குடி டி.வி.கே. நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெயில் வார்டன்கள் உடனடியாக அங்கு வந்து அவர்களை பிடித்து சென்றனர்.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர்.
- மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.
மதுரை:
பல்வேறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைக்கு வரும் கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.
மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு அருந்திவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜையின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதைக்கண்ட சிறை சந்தையில் பணிபுரியும் தண்டனை சிறைவாசி கார்த்திக் அந்த கைப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அதில் அவர்களுடைய ஆதார் தவிர தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தனது கைப்பையை எங்கு தவறவிட்டோம் என்று தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்ற சிம்டா சீனிவாஸ் கடைசியாக மதுரை மத்திய சிறை சந்தைக்கு வந்தனர். அவர்களிம் உரிய விசாரணைக்கு பிறகு மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கைப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை பெற்றுக் கொண்ட சுற்றுலாவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைவாசி கார்த்திக்கின் நேர்மையை பாராட்டினர். உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.
- மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க மதுரை கிளை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் நடைபெற்ற பல் மருத்துவமுகாமில் 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
- மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
- ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது சோதனை மேற்கொண்ட அறைகளில் இருந்த கைதிகள் விமல், பிரவீன், அஸ்வின் குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறைத்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
- சந்திரபாபு நாயுடுவிடம் 2-வது நாளாக இன்று மீண்டும் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் அவரை கைது செய்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. சந்திரபாபு நாயுடுவை மீண்டும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது சந்திரபாபு நாயுடுவிடம் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சி.ஐ.டி. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
சி.ஐ.டி. அதிகாரிகளின் மனு தாக்கல் ஏற்ற நீதிபதி சந்திரபாபு நாயுடுவிடம் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். விசாரணையின் போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்களை சந்தித்து கலந்து ஆலோசிக்க காலகால அவகாசம் வழங்க வேண்டும் ஒரு வீடியோகிராபர் 2 ஊடகவியலாளர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர்.
இதையடுத்து சிஐடி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கள் 3 பேர் இளநிலை போலீஸ் அதிகாரிகள் 6 பேர் நேற்று காலை 9.30 மணி அளவில் ராஜமுந்திரி ஜெயிலுக்கு சென்றனர்.
அப்போது சிறைத்துறை அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 2½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது சந்திரபாபு நாயுடுவின் வக்கீல்கள் சீனிவாசராவ், சுப்பாராவ் உடன் இருந்தனர். மதியம் 1 மணி நேர உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் கிடுக்குபிடி கேள்விகளால் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தினர்.
73 வயதான சந்திரபாபு நாயுடு போலீஸ் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடுவிடம் 2-வது நாளாக இன்று மீண்டும் சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு மீது போடப்பட்டுள்ள ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அசோக்ராமன் அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார்.
- அசோக்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பம் அடுத்த சொரத்தங்குழி மாரியம்மன்கோவில் தெரு ைவ சேர்ந்தவர் மாம்பழம்என்ற அசோக்ராமன் (26). இவர் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதியன்று சொத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாப்பன் கொள்ளையை சேர்ந்த பழனிவேலிடம் மாமூல் கேட்டு மிரட்டி கொடுக்க மறுத்தவரை கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தொடர் குற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக கலெக்டர் உத்தரவுபடி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- மதுரை மத்திய சிறையில் போக்சோ விசாரணை கைதி திடீரென இறந்தார்.
- சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
விருதுநகர மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொள்ளக் கொண் டான் நக்கனேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தாசையா (வயது62). இவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசா ரணை கைதியாக அடைக்கப் பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாக தாசையாவுக்கு கிட்னி நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்ற உடல்நிலை மோசமாகவே தாசையா சிறையில் மயங்கி விழுந் தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் சிறை காவலர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தாசையா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறை அதிகாரி மகேஸ்வரி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாசையாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
- சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
சூலூர்:
ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.
தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
- பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.
கோவை:
கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.
போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.
இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.
நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.
இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- திருச்சி மத்திய சிறையில் கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.
- சோதனையின் போது கைதிகளிடம் செல்போன்கள் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆயுதங்கள் இருக்கிறதா? என தேடினர்.
திருச்சி :
திருச்சி மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் இருந்து வருகின்றன. மேலும் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல்களும் நடக்கின்றன.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் அப்பள்ளியை சூறையாடிய வழக்கில் கைதான 200-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கைதியிடமிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மத்திய சிறையில் சிறையில் அதிரடி சோதனை நடைபெற்றது. திருச்சி உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீசார், 20 ஆயுதப்படை பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் காலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது.
அவர்களுடன் சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் 80-க்கும் மேற்பட்ட சிைற காவலர்களும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கைதிகளிடம் செல்போன்கள் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆயுதங்கள் இருக்கிறதா? என சல்லடை போட்டு தேடினர். இதில் ஒரு செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய ஜெயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஜெயிலுக்குள் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்